லிவர்பூல் இங்கிலாந்தின் மெர்ஸெ முகத்துவாரத்தின் கிழக்குப் பகுதியை ஒட்டி அ…லிவர்பூல் இங்கிலாந்தின் மெர்ஸெ முகத்துவாரத்தின் கிழக்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாநகரம் மற்றும் பெருநகர பரோ ஆகும். ஒரு பரோவாக 1207 ஆம் ஆண்டில் இது உருவாக்கப்பட்டு 1880 ஆம் ஆண்டில் மாநகர அந்தஸ்து வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் நான்காம் பெரிய நகரமான லிவர்பூல் நகரத்தில் 435,500 பேர் வசிக்கின்றனர். இப்பெருநகரம் 816,216 பேர் மக்கள்தொகை கொண்ட பரந்த லிவர்பூல் நகரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது.